பாதுகாப்பு கவசத்துக்குள் போதைப்பொருள்!

You are currently viewing பாதுகாப்பு கவசத்துக்குள் போதைப்பொருள்!

பனாகொடை இராணுவ முகாமில் விசேட அவசரகால பணிகளில்
ஈடுபடுவருதாகத் தெரிவித்து, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஹெரோயின் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிட்மிருந்து சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் களுத்துறை வலய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு காவல்த்துறையால் இன்று (28) கைப்பற்றப்பட்டது

காவல்த்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல்கள் ஒன்றின் அடிப்படையில் களுத்துறை, ரஜவத்தை சந்தியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபரை இடைமறித்து நடத்திய விசாரணையின் போது இராணுவ விசேட அவசரகால பணிகளுக்காக செல்வதாகக் கூறி போலி ஆவணங்களை பொலிஸாரிடம் கையளித்துள்ளார்.

பின்னர் சந்தேக நபரிடம் மேற்கொண்ட மேலதிக சோதனையின் போது முககவசத்தில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் 10 கிரேம் ஹெரோயின் போதைப் பொருள், இராணுவ அதிகாரிகளுக்கு கட்டளையிடல் படைப் பிரிவுக்கான (rubber seal) பதவி முத்திரை ஒன்று, இராணுவ அடையாள அட்டைகள் இரண்டு, விடுமுறை அனுமதிப்பத்திரம், கைத்தொலைபேசி இரண்டு, ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுக்காக பாவிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பவற்றை காவல்த்துறையினர் கைப்பற்றினர்.

களுத்துறை சேருபிட்டை பகுதியைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக நடவடிக்கைகளை களுத்துறை தெற்கு காவல்த்துறை நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு

சிறீலங்கா இராணுவத்தினர் சமூகத்தை சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலை ஊக்கிவிப்பதோடு ஒத்தாசையாக இருந்துவருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள