பிரித்தானியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா: ஒரே நாளில் இத்தனை பாதிப்பா?

You are currently viewing பிரித்தானியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா: ஒரே நாளில் இத்தனை பாதிப்பா?

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரித்தானியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் படி, இங்கு 60 சதவீத பெரியவர்கள் முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

கொண்டுள்ளனர். இது போன்ற நிலையில், தற்போது பிரித்தானியாவில் கொரோனாவால் புதித்தாக 10321 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று 10476 பேர் பாதிக்கப்பட்டிருந்ததுடன், 11 பேர் உயிரிழந்தனர்.

இதே கடந்த சனிக்கிழமை 7738 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 12 பேர் பலியாகினர். இந்த ஆண்டின் ஜனவரி மாத துவக்கத்தில், கொரோனா பாதிப்பு குறைய துவங்கியது.

ஆனால், இந்த இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி, மீண்டும் பீதியை கிளப்பி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சராசரியாக 10 பேர் உயிரிழந்து வருகின்றனர்.

ஜூன் 17 முதல் கொரோனாவால் புதித்தாக 1,316 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், டெல்டா வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜூன் தொடக்கத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 928-ஆக இருந்தது, அது இப்போது 10 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments