பிரித்தானியாவையே கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஐரோப்பாவுக்கு அருகில்!

You are currently viewing பிரித்தானியாவையே கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஐரோப்பாவுக்கு அருகில்!

முழு பிரித்தானியாவையே கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புடின் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. உலகிலேயே பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் அந்த நீர்மூழ்கிக் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது.

பிரச்சினை என்னவென்றால், Barents கடலின் அருகில்தான் ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் அமைந்துள்ளன. அந்த நீர்மூழ்கிக் கப்பல், கதிரியக்க சுனாமியையே உருவாக்க வல்லதாகும்.

புடின் ஆதரவாளர் ஒருவர் அந்த நீர்மூழ்கியைக் குறித்துக் கூறும்போது, அது முழு பிரித்தானியாவையே கடலின் ஆழத்தில் மூழ்கடிக்கும் திறன் கொண்டது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments