பிரித்தானியா-பிரான்ஸ் இடையே இருதரப்பு உச்சி மாநாடு!

You are currently viewing பிரித்தானியா-பிரான்ஸ் இடையே இருதரப்பு உச்சி மாநாடு!

இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரான்ஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரான்ஸ் வந்து இறங்கியுள்ளார். பாரிஸில் உள்ள எலிசே அரண்மனைக்குச் சென்ற பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வரவேற்றார்.

நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாட்டில் புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பான வேறுபாடுகளை களைவது, அத்துடன் வணிகம் மற்றும் ராணுவ உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் இந்த சந்திப்பின் மூலம் இருநாடுகளின் ஆழமான நட்புறவை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று எலிசே அரண்மனை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் போர் நடவடிக்கையில், ஆரம்ப முதலே பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், போரானது ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினும் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதால் உக்ரைன் தொடர்ந்து உலக நாடுகளிடம் ஆயுத உதவியை கோரி வருகிறது.

ஆகவே இந்த இருதரப்பு உச்சி மாநாட்டில், உக்ரைனுக்கான உதவிகள் வழங்குவது தொடர்பாகவும் இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments