பிருத்தானியாவில் கொரோனா : இறப்பு எண்ணிக்கை 9000 ஐ தாண்டியுள்ளது!

  • Post author:
You are currently viewing பிருத்தானியாவில் கொரோனா : இறப்பு எண்ணிக்கை 9000 ஐ தாண்டியுள்ளது!

பிருத்தானியாவில் மேலதிகமாக 866 கோவிட் -19 நோயாளிகள் இறந்துள்ளனர் என்று NHS England இன் சமீபத்திய புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி Sky News எழுதியுள்ளது.

ஸ்காட்லாந்து அதிகாரிகள் அங்கு 48 புதிய இறப்புகள் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளனர். ஸ்காட்லாந்தில் இதுவரை, கொரோனா வைரஸால் மொத்தம் 495 பேர் இறந்துள்ளனர்.

வேல்ஸில், இறப்பு எண்ணிக்கை 315 ஆக அதிகரித்துள்ளது.
வடக்கு அயர்லாந்தில் இது 92 ஆக அதிகரித்துள்ளது.

மேலுள்ள தரவுகளை வைத்து பார்ப்போமானால், பிருத்தானியாவில் கோவிட் -19 இன் விளைவாக இதுவரை 9,000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அதாவது மொத்தம் 9016 பேர் இறந்துள்ளனர்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள