கொரோனா பிருத்தானியா : மக்கள் தொகையில் 80 விழுக்காடு, கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா பிருத்தானியா : மக்கள் தொகையில் 80 விழுக்காடு, கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்!

இங்கிலாதில் கொரோனா வைரஸால் நேற்றைய தினம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரமர் போரிஸ் ஜான்சன் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டதாகவும் பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் பரவலை பிருத்தானியாவில் கட்டுப்படுத்த முடியாததால், நாள் தோறும் நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டு இருக்கின்றன. இதன் மூலம் இங்கிலாந்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,958 யை தொட்டுள்ளது.

இங்கிலாந்தில் இதே நிலை நீடித்தால் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என அரசாங்க ஆலோசகர் ரூபர்ட் ஷூட் தெரிவித்துள்ளார். அரசாங்க ஆலோசகரின் குறித்த கருத்துக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்தும், அரசு, அதிகாரிகள் தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

அரசாங்க நெறிமுறைகளை மீறிய இந்த கருத்து கண்டிப்பாக கண்டனத்துக்கு உரியது என தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பகிர்ந்துகொள்ள