புதுவையின் கவி ஈகை!!

You are currently viewing புதுவையின் கவி ஈகை!!

ஈழத்தின் இயல் இசை நாடகம்
பண்படுத்தும் பல்கலை கோட்டை,
புதுமை.. கவிவரிகள் அலைமோதும் கடற்கரை
எங்கள் கவி கோ புதுவை இரத்தினதுரை

பதினான்கு வயதினிலே
கவித் தளம் வென்றாய்,
பாமரன் தன் வாழ்வை நின்று கேட்பதை
உம் கவி அனுகூலத்தில் கண்டாய்

கவியில் அரசியல் கலந்து பாய்கின்ற
பெரும் நீர்வீழ்ச்சி,
மக்கள் வளம் உம் கவிகேட்டு
எழுந்து நடக்க செய்கின்ற உயர் எழுச்சி

உறங்கிடும் இளமைகள் விழித்தெழ
உம் படைப்பால் சூடுவைதாய்,
நாம் களைப்பின்றி இலக்குநோக்கி ஓடிட
என்றும் இருக்கும் உம் கவிதை கையிருப்பாய்

மக்கள் நினைப்பதையே உம் கவி பாடும்,
மண்ணுக்காய் மாண்ட மறவர்
கனவையே அது தினம் தேடும்

கவியடியெடுத்து எம்மவர் நுகத்தடியை
உடைத்தெறிய வந்தாய்,
இயல்பாய் நீர் சிற்பி என்றதாலோ
கவியாயுதம் எடுத்து மாந்தரிடத்தில்
புரட்சி சிற்பம் கொண்டுவந்தாய்

இன இழப்பை மட்டும் சொல்லி
புலம்பாத மேன்மை சொற்கள்,
எம் சிந்தை தீட்டி திடப்படுத்தும்
கவி ஒவ்வென்றும் படிக்கற்கள்

புதுவை போற்றல்மிகு கவி ஈகை,
வேங்கை வெற்றி உலகெங்கிலும்
ஒழித்திட சுழலும் மொழியிசை வாகை

வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்
உம் இருவிரல் இடுக்கில்
இம்மை ஈன்ற காவிய கானம்,
பாடல் கேட்க்கும்பொழுதெல்லாம்
வென்றுவந்த நிலம் கண்முன்னே தோன்றும்

வாழ்த்துகிறேன் மூத்த கவியே
என் புலமையால் அல்ல
உமேல் இருக்கும் அதீத அன்பினால்…

✍️ சஜிதரன்

பகிர்ந்துகொள்ள