புரவி முல்லைத்தீவினையும் தாக்கும் அனைத்து திணைக்களங்களும் தயார் நிலையில்!

You are currently viewing புரவி முல்லைத்தீவினையும் தாக்கும் அனைத்து திணைக்களங்களும் தயார் நிலையில்!

புரவி புயலினை எதிர்கொள்வது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்  01.12.2020 நடைபெற்றுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முப்டை அதிகாரிகள் அரச திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் மற்றும் பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர்,நீர்பாசன திணைக்கள  உதவிப்பணிப்பாளர்,வீதி அபிவிருத்திதிணைக்களம்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர்,பிரதேச செயலாளர்கள் என திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ர் கலந்து கொண்டுள்ளார்கள்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரவி புயல் முல்லைத்தீவு மாவட்டத்தினை கடந்து செல்ல வுள்ள நிலையில் மாவட்டத்தின் கரையோர பகுதிமக்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்  பகுதி ஊடாக புயல் ஊடறுத்து செல்லவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் கொக்குளாய் பகுதியில் உள்ள கரையோ மக்களை நாளை வியாழக்கிழமை இரவு பாதுகாப்பான இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடைத்தங்கல் முகாமிற்காக பாடசாலை ஒன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் கரையோர பகுதி மக்களுக்கான அறிவிப்புக்களை பொலீசார் மற்றம் பிரதேச செயலகங்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தால் அதனை அகற்றுவதற்கான கட்டளைகள் உரிய அதிகாரிகளுக்கு மாவட்ட செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் குளங்கள் உடைப்பெடுக்குமாக இருந்தால் அவற்றை கண்காணிக்க கமக்கார அமைப்பினருடன் கமநல அபிவிருத்தி  திணைக்கள உத்தியோகத்தர்களும் கண்காணிப்பில் ஈடுபடுமாறும் அனர்த்தம் ஒன்று ஏற்படும் பட்டசத்தில் அந்த இடத்திற்க அருகில் உள்ள படைமுகாம் அதிகாரிகளை பிரதேச செயலாளர்கள் தொடர்பு கொண்டு படையினரை உதவிக்கு அழைக்க படைஅதிகாரிகளுக்கு மாவட்ட செயலாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன்.
கரையோர பகுதிமக்களை புதன்கிழமை மாலை தொடக்கம் வியாழக்கிழமை வரையான இரவு நேரங்களில் மிக மிக அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையின் நிலப்பரப்பினை ஊடறுக்கும் புரவி புயலாக இது எதிர்வு கூறப்பட்டுள்ளது பாரிய சேதத்தினை ஏற்படுத்தலாம் என்ற எதிர்வு கூறலினை தொடர்ந்து அனைத்து திணைக்களம் மற்றும் மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள