புலிகளுக்கு எதிராக செயற்பட்ட பிரித்தானிய கூலிப்படை மீது போர்க் குற்ற விசாரணை!!!

You are currently viewing புலிகளுக்கு எதிராக செயற்பட்ட பிரித்தானிய கூலிப்படை மீது போர்க் குற்ற விசாரணை!!!

தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையில் பங்கேற்ற பிரித்தானிய கூலிப்படைகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறு ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1984 தொடக்கம் 1988 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிரித்தானியாவின் தனியார் இராணுவ நிறுவனமான கீனி மீனி கூலிப்படைகள், சிறிலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சி அளித்ததுடன், போர் நடவடிக்கைகளிலும் பங்கேற்றிருந்தனர்.

இந்தக் காலகட்டத்தில், இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானியாவின் பெருநகர பொலிசார் விசாரணைகளையும் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையிலேயே சிறிலங்காவில் போர் நடவடிக்கையில் பங்கேற்ற பிரித்தானிய கூலிப்படைகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகள் நடத்த வேண்டும் என்று ஐ.நாவின் ஆறு சிறப்பு அறிக்கையாளர்கள் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கையிடுமாறும் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் கோரியுள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தும் கடிதம் ஒன்று ஐ.நா நிபுணர்களால் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள