பெரும்பான்மையை உறுதி செய்யும் தேர்தலில் கோட்டைவிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்!

You are currently viewing பெரும்பான்மையை உறுதி செய்யும் தேர்தலில் கோட்டைவிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்!

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் சாதனை வெற்றி பெற்று இரண்டு மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்யும் தேர்தலில் கோட்டைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவர் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாவிட்டால் நாட்டை அரசியல் முடக்கத்தில் தள்ளக்கூடிய பெரும் பின்னடைவை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எதிர்கொள்ளவிருக்கிறார்.

மொத்தமுள்ள 577 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு சுமார் 289 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், மேக்ரான் கட்சிக்கு ஆதரவாக 230 முதல் 250 ஆசானங்களே கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதனால் தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் எனவும், ஆட்சியை தக்கவைக்க அதிகாரங்களை பகிர்வது, கட்சிகளிடையே சமரசம் செய்து கொள்வது உள்ளிட்ட பிரான்ஸ் சமீப காலங்களில் கண்டிராத முயற்சிகளை மேக்ரான் முன்னெடுக்க நேரிடும்.

கடைசியாக கடந்த 1988ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தான் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனது.

இதனிடையே, நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைக் கருத்தில் கொண்டால், தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் நமது நாட்டிற்கு ஆபத்தாக முடியும் என்று பிரதமர் எலிசபெத் போர்ன் கவலை தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மேக்ரான் தரப்பு கூட்டணிக்கான அனைத்து முயற்சிகளையும் துவங்கியுள்ளதாக பிரதமர் போர்ன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மேக்ரான் முன்னெடுக்கும் முயற்சிகள் முடிவுக்கு எட்டாமல் போனால், இறுதியில் ஒரு விரைவான தேர்தலுக்கு மேக்ரான் அழைப்பு விடுக்கலாம் என்றே கூறப்படுகிறது.

இதுவரை வெளியான கருத்துக்கணிப்பில் மேக்ரான் கட்சி 230 முதல் 250 ஆசனங்களையும், இடதுசாரிகள் 141 முதல் 175 ஆசனங்களையும் லீ பென் கட்சி 60 முதல் 75 ஆசனங்கள் வரையில் கைப்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலில், இருபது ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரெஞ்சு ஜனாதிபதியாக மேக்ரான் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments