பெருவீரனுக்கு எங்கள் வீரவணக்கம்!!

You are currently viewing பெருவீரனுக்கு எங்கள் வீரவணக்கம்!!
பெருவீரனுக்கு எங்கள் வீரவணக்கம்!! 1

2008ஆம் ஆண்டு சித்திரை மாதம் இரண்டு சிறிய வலிந்து_தாக்குதல்கள் பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் தலைமையில் தமிழர் தாயகத்தின் இதய பூமியாகிய மணலாறில் மேற்கொள்ளப்பட்டது.
முதலாவது தாக்குதல் சித்திரை 27ஆம் தேதியும் இரண்டாவது சித்திரை 29 ஆம் தேதியிலுமாக இரண்டு தாக்குதல்கள் எதிரியின் இராணுவ முன்னரங்கு மீது தொடுக்கப்பட்டது.
இந்த இரண்டு வலிந்து தாக்குதல்களும்( Offensive ) நாங்கள் எதிபார்த்த வெற்றியை எமக்கு அளிக்கவில்லை.
மூன்றாவது நாளும் தமது முன்னரங்க நிலைகள்(Foreword Defense Line)மீது தாக்குதல் நடைபெறக்கூடும் என்ற அச்சங்கொண்ட எதிரி அன்றிரவு எதிரி காடே அதிரும் வண்ணம் பயங்கர எறிகணைத் தாக்குதல் நாடாத்தினான் அதில் சொர்ணம் அண்ணர் காயமடைந்தார்.


தாக்குதல் பலனளிக்காத காரணத்தால் சிகிச்சைபெற புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த வைத்தியசாலைக்கு செல்லமறுத்துவிட்டார்.
அக்காலத்தில் களம் பல கண்ட மணலாறு_காட்டிலேயே
தொடர்ச்சியாக தங்கியிருந்தார்.

வீடு சென்று மனைவி பிள்ளைகளை சந்திப்பது கூட மிக மிக அரிதாகவே இருந்தது.
புதுக்குடியிருப்பு பகுதிக்கு சென்றால் தலைவரை நேரடியாக சந்திக்கும் வழக்கம் அவரிடம் இருந்தது.
சிகிச்சைக்காக_களநிலையைவிட்டு புதுக்குடியிருப்புக்கு செல்லும் பட்சத்தில் தலைவரையும் சந்திக்க வேண்டிவரும் என்பதும் அவருக்கு தெரியும்.ஆனால் மருத்துவ சேவையில் ஈடுபடும் நாங்கள் அவரை சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய எமது கடமை.
மருத்துவப் பொறுப்பாளர் ரேகா அவர்கள் உட்பட அங்கிருந்த மூத்த போராளிகள் அவரை சிகிச்சைக்கு அனுப்ப எவ்வளவோ ஆலோசனை சொல்லியும் #தமிழினத்தின்_மூத்ததளபதி கேட்பதாயில்லை,மாறாக அவரது கண்கள் இரத்தச் சிவப்பாக மாறியது.


இப்போது எனது தடவை நெஞ்சில் உள்ள துணிவு எல்லாத்தையும் வரவழைத்து என்னைத் திடப்படுத்திக்கொண்டு புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்குச் சென்றால் மூத்த வைத்தியர் சி.சிவபாலன் அவர்களைக்கொண்டு Foreign Body removal செய்துவிட்டு உடனடியாகவே களமுனைக்குத் திரும்பலாம் என்றேன்.
மேலதிக சிகிச்சைக்கு செல்லுங்கள் என கேட்டதற்காக என் மீதும் பெரும் கோபம் கொண்டதுடன் மருத்துவ போராளி நம்பியையும் என்னையும் வேறு ஒரு முகாமுக்கு(குட்டுவன் முகாம்)அனுப்பிவிட்டார்.


சிறிது நேரம் கழித்து என்னை ஜீவன் முகாமுக்கு அழைத்தார்.”தனக்கு அங்கேயே வைத்து சிகிச்சியளிக்கமுடியாதா” என்று கேட்டார். தயங்கினேன், சிகிச்சைக்குரிய உபகரணங்கள் இல்லையென மறுத்தேன். ஆனால் அவரோ எதையுமே கேட்கவில்லை மீண்டும் கேட்டார் இப்போது ரேகா அன்ணரின் முகத்தைப் பார்த்தேன்.
தலையை அசைத்ததுடன் அதற்குரிய Surgical Instruments,Drugs யும் புதுக்குடியிருப்பிலிருந்து உடனடியாகவே பெற்றுத்தந்தார்
சண்டையை வெல்லாமல் அண்ணையின் முகத்தை பார்க்கமாட்டேன் என்றிருந்த எங்கள் வீரத்தளபதியையும் போராளிகளையும் தமிழினம் மறைந்துவிடுமா?


தமிழினத்தின் மூத்ததளபதியின் வரலாறு மிகவும் பெரியது. பல பக்கங்களைக் கொண்டது. அதில் சில வசனங்களை மட்டும் பதிவு செய்துள்ளேன். அவரின் வரலாறை யாரும் எழுத முன்வந்தால் மேலும் சில வசனங்களை சொல்ல சித்தமாகவுள்ளேன்!
வீரவணக்கம்
பெருவீரனே!🎖

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments