பெர்கனில் புதிய கொரோனா தொற்றுக்கள் ; நோர்வேயில் மொத்தம் 72 பேர் பாதிப்பு!

  • Post author:
You are currently viewing பெர்கனில் புதிய கொரோனா தொற்றுக்கள் ; நோர்வேயில்  மொத்தம் 72 பேர் பாதிப்பு!

இன்று வியாழன் மதியம் பெர்கனில்(BERGEN) கொரோனா வைரஸ் பரிசோதனையில் ஐந்து புதிய நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஐந்து பேருக்கும் வடக்கு இத்தாலியூடாக கொரோனா நோய் தொற்றியுள்ளதாக அறியப்படுகிறது, இதனை பெர்கன் நகராட்சி, ஊடக சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

பெர்கனில் ஐந்து புதிய கொரோனா தொற்றுக்களுடன், நோர்வேயில் மொத்தம் 72 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள