பொலிகண்டியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு!

You are currently viewing பொலிகண்டியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு!

யாழ்ப்பாணம்- வல்வெட்டிதுறை பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

வல்வெட்டிதுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து இன்று அதிகாலை அங்கு சென்ற இராணுவத்தினர், கரையொதுங்கி வாடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் 217 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகளை மீட்டனர்.

இவ்வாறு மீட்கபட்டவை வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவற்துறையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை கிளன் தோட்டப் பகுதியில் 6 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை, உடமையில் விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் அவரது நெருங்கிய சகாவான அதே வயதுடைய இளைஞன் ஒருவரும் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் கூறினர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகவும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய யாழ்ப்பாணம் சிறீலங்கா காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments