போதைப் பொருட்கள் கப்பல் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது!

You are currently viewing போதைப் பொருட்கள் கப்பல் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது!
போதைப் பொருட்கள் கப்பல் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது! 1

இலங்கையின் ஆழ்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பலை சுற்றிவளைத்த கடற்படையினர் 12 ஆயிரத்து 500 மில்லியன் (ஆயிரத்து 250 கோடி) ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கப்பல் சர்வதேச கடலில் கடந்த சனிககிழமை எவ்வித அரச கொடியும் இன்றி பயணித்த நிலையில் கடற்படையினர் அதனைச் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன்போது 500 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் எனும் போதைப்பொருள் மற்றும் 500 கிலோகிராம் நிறையுடைய கொக்கெய்ன் எனும் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் இசுரு சூரியபண்டார இன்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாபுல் எனப்படும் போதைப்பொருள் 200 பைக்கற்றுகளும், அடையாளம் காணப்படாத 100 கிராம் போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றின் சரியான மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும், பொதுவாக சுமார் 12 ஆயிரத்து 500 மில்லியன் (ஆயிரத்து 250) ரூபாவுக்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பலை மேலதிக விசாரணைகளுக்காக நாளை (01) திக்கோவிட்ட துறைமுகத்துக்குச் செலுத்திச் சென்று கடுமையான சோதனையிடத் திட்டமிடப்பட்டுள்ளதும் என கடற்படைப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வரும்போது கைது செய்யப்பட்ட மூன்றாவது வெளிநாட்டு கப்பல் இதுவாகும்.

இந்த சம்பவத்திற்கு முன்னர், பெப்ரவரி 22 மற்றும் 25 ஆம் திகதிகளில் போதைப்பொருள் கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் அவைகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடிக் கப்பலொன்று கைது செய்யபட்டதுடன் 16 வெளிநாட்டினர், 05 இலங்கையர்கள் மற்றும் கடலில் போதைப்பொருள் பரிமாற்றத்தில் ஈடுபட்ட 06 இலங்கையர்கள் தீவின் தெற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

பகிர்ந்துகொள்ள