மடிக்கக்கூடிய கைத்தொலைபேசியை பரிசோதிக்கும் ஆப்பிள் நிறுவனம்!

You are currently viewing மடிக்கக்கூடிய கைத்தொலைபேசியை பரிசோதிக்கும் ஆப்பிள் நிறுவனம்!

மடிக்கக்கூடிய வகையிலான கைத்தொலைபேசி சாதனமொன்றை உறுதிசெய்யும் முயற்சியில் உலகப்புகழ் பெற்ற ஆப்பிள் / Apple நிறுவனம் முனைப்போடு ஈடுபட்டுள்ளது.

தற்போது, “ஸம்சுங் / Samsung” நிறுவனத்தின் “Galaxy Z Fold” என்ற மடிக்கக்கூடிய வகையிலான கைத்தொலைபேசிகள் சந்தைக்கு வந்திருக்கும் நிலையில், பல்வேறு நிறுவனங்களும் இவ்வகையான கைத்தொலைபேசிகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனமும் இவ்வகையான கைத்தொலைபேசிகளை தயாரிக்கும் முறைச்சியில் இறங்கியுள்ளது. எனினும், மற்றைய நிறுவனங்களின் தயாரிப்பிலிருந்து ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு வேறுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வழமையாக ஒரு பக்கம் மட்டுமே மடிக்கக்கூடியதாக தயாரிக்கப்படக்கூடிய இவ்வகை கைத்தொலைபேசியை, இரண்டு பக்கமும் (உட்பக்கமும், வெளிப்பக்கமும்) மடிக்கக்கூடியதாகவும் ஆப்பிள் நிறுவனம் வடிவமைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் இறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பரிசோதிக்கப்பட்டு கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் இவ்வகை கைத்தொலைபேசிகள், சுமார் ஒரு இலட்சம் தடவைகள் மடித்தும், விரிக்கவும் கூடியதாக தயாரிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இது தொடர்பான மேலதிக செய்திகளை ஆப்பிள் நிறுவனம் இரகசியமாகவே வைத்திருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள