மட்டக்களப்பு நகரில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம்!

You are currently viewing மட்டக்களப்பு நகரில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம்!

மட்டக்களப்பு நகரில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவரை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதின்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

குறித்த சிறுமியின் தாய் தந்தை வேலை நிமிர்த்தமாக பண்ணை ஒன்றில் தங்கி வாழ்ந்து வரும் நிலையில் அவர்களது நகர் பகுதி வீட்டில் சிறுமி அவரது அம்மம்மாவுடன் தங்கிருந்து கல்வி கற்று வருகின்றார்.

இந்த நிலையில் சிறுமி கடந்த மாதம் 22 ம் திகதி நகர்பகுதியில் உள்ள கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டில் இருந்து தனிமையில் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தனது தொலைபேசி எண்ணை கொடுத்துச் சென்றுள்ளார்.

இதைனை அடுத்து அந்த இளைஞனுடன் தொடர்பு கொண்ட நிலையில் குறித்த இளைஞன் சிறுமியின் வீட்டிற்கு கடந்த மாதம் 27 ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு மோட்டர் சைக்கிளில் வந்து சிறுமியை வெளியே வருமாறு அழைத்து அவனது கூளாவடி வீட்டில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளான்.

இவ்வாறான நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகங் கொண்ட தந்தையார் கடந்த 8ம் திகதி அதிகாலை 3.00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது சிறுமி அங்கு இல்லை என்பதை அறிந்து தந்தையார் மறைந்திருந்த போது மோட்டர் சைக்கிள் ஒன்றில் இளைஞன் ஒருவர் சிறுமியை கொண்டு வந்து விடுவதை அவதானித்து அவனை மடக்கி பிடித்து தாக்கியதையடுத்து அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

இதனையடுத்து சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் குறித்த இளைஞனை நேற்று கைதுசெய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த சிறுமி இதற்கு முன்னர் கார் ஒன்றில் ஆண் ஒருவர் ஏற்றிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் தொடர்பாக குறித்த சிறுமியை சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளால் கண்காணிப்பில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments