மணித்தியாலத்திற்கு நால்வரை பலியெடுக்கும் கொரோனா: ஒரே வாரத்தில் 603 பேர் பலி!

You are currently viewing மணித்தியாலத்திற்கு நால்வரை பலியெடுக்கும் கொரோனா: ஒரே வாரத்தில் 603 பேர் பலி!

இலங்கையில் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 603 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் மேலும் 94 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக நான்காவது நாளாக 90ஐ கடந்த கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன் மூலம் மணித்தியாலத்திற்கு நால்வர் என்ற அடிப்படையில் கொரோனாவுக்கு பலியாகும் நிலையேற்பட்டுள்ளது.

சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டு வரும் நாளாந்த கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைகளின் மூலம் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில்,

ஓகஸ்ட் – 01 – 63 பேர்

ஓகஸ்ட் – 02 – 74 பேர்

ஓகஸ்ட் – 03 – 82 பேர்

ஓகஸ்ட் – 04 – 94 பேர்

ஓகஸ்ட் – 05 – 98 பேர்

ஓகஸ்ட் – 05 – 98 பேர்

ஓகஸ்ட் – 06 – 94 பேர்

இவ்வாறு ஓகஸ்ட்-01 தொடக்கம் ஓகஸ்ட்-07 வரையான ஒரு வாரத்தில் 603 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் கொவிட் பரவல் அதிகரிக்கும் நிலையில் எதிர்வரும் 15 நாட்கள் தீர்மானமிக்கது என்பதால் பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என அரசாங்கமும் சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments