மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்களை ஆராயவுள்ள ஐநா சபை!

You are currently viewing மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்களை ஆராயவுள்ள ஐநா சபை!
GENEVA, SWITZERLAND - December 17, 2017: Allee des Nations (Avenue of Nations) of the United Nations Palace in Geneva, with the flags of the member countries.

நான்காவது முறையாக 2023 பெப்ரவரி 1 புதன்கிழமையன்று இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்களை ஐநா சபைக்கான மனிதஉரிமைகள் ஆணைக்குழு  ஆராயவுள்ளது

2023 ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமான இந்த அமர்வு, பெப்ரவரி 3 வரை இடம்பெறுகிறது.

ஏற்கனவே இந்த செயற்குழுவில் இலங்கையின் மனித உரிமை மதிப்பாய்வுகள், முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையின்கீழ் 2008 மே, 2012 ஒக்டோபர், மற்றும் 2017 நவம்பர் ஆகிய வருடங்களில் இடம்பெற்றன.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முன்னேற்ற அறிக்கை, சிறப்பு நடைமுறைகள், மனித உரிமைகள் உடன்படிக்கை அமைப்புகள் மற்றும் பிற ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் என அறியப்படும் சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் மற்றும் குழுக்களின் அறிக்கைகளில் உள்ள தகவல்கள்,தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள், பிராந்திய அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் உட்பட பிற பங்குதாரர்களால் வழங்கப்படும் தகவல்கள் என்பன இந்த கலந்துரையாடலின்போது மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.

பெப்ரவரி 1 ஆம் திகதி ஜெனீவாவில் முற்பகல் 9மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில்இலங்கையின் பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கவுள்ளார்.

அல்ஜீரியா, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் மீளாய்வுக்கான அறிக்கையாளர்களாக பணியாற்றவுள்ளனர்.

இந்தநிலையில் மதிப்பாய்வுக்கான இறுதி நாளான பெப்ரவரி 3ஆம் திகதியன்று இலங்கைக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழு நிறைவேற்றவுள்ளது. அத்துடன் தமது கருத்துக்களையும் வெளியிடவுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments