மருந்துகள் விற்பனையில் பங்கீட்டு முறை அமுலுக்கு வருகிறது! “கொரோனா” கலவரத்தின் விளைவு!!

You are currently viewing மருந்துகள் விற்பனையில் பங்கீட்டு முறை அமுலுக்கு வருகிறது! “கொரோனா” கலவரத்தின் விளைவு!!

நோர்வேயில், “கொரோனா” பரவலின் விளைவால் அரசாங்கம் இறுக்கமான நடைமுறைகளை அமுல்படுத்தியிருப்பதால், அத்தியாவசிய பொருட்களுக்கும், மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாமென்ற அச்ச உணர்வில், மக்கள் அதிகளவில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், மருந்து வகைகளையும் வாங்கி பத்திரப்படுத்தி வருவதாக செய்திக வெளிவந்திருக்கும் நிலையில், அதற்கான அவசியமேதும் இல்லையென அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அரச களஞ்சியத்தில் தேவையான அளவுக்கு உணவுப்பொருட்கள் இருப்பதாகவும், தேவைக்கு அதிகமாக அவற்றை வாங்கி சேமிப்பதற்கான தேவையெதும் இல்லையென தெரிவிக்கப்பட்டாலும், அங்காடிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.

தவிரவும், மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சேமித்து வைப்பதற்காகவும் மக்கள் வரிசையில் காத்துக்கிடப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணமுள்ளன. இதனால், அத்தியாவசிய மருந்துப்பொருட்க்கள் உள்ளிட்ட வலி நிவாரணிகளை வாங்கிக்கொள்வதற்கு பங்கீட்டு முறைமையை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, வலிநிவாரணியாக பயன்படுத்தப்படும் “Paracet” மாத்திரைகள், முறையான அனுமதியை வைத்திருக்கும் ஒருவருக்கு 100 மாத்திரைகள் என்னும் விகிதத்திலும், அனுமதியை வைத்திருக்கத்தவர்களுக்கு 20 மாத்திரைகள் என்னும் விகிதத்திலும் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் மருந்து வகைகள் சமமாக கிடைக்கவேண்டும் என்பதற்காகவே, மேற்படி பங்கீட்டு முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, தம்மிடம் வரும் நோயாளர்களுக்கும் குறித்த பங்கீட்டு முறைமை பற்றி விளக்கமளிக்குமாறு வைத்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள