மருந்து கழிவுகளை தமிழ்மக்களின் இடங்களிலேயே கொட்டிய தனியார் நிறுவனம் மக்கள் போராட்டம்!

You are currently viewing மருந்து கழிவுகளை தமிழ்மக்களின் இடங்களிலேயே கொட்டிய தனியார் நிறுவனம் மக்கள் போராட்டம்!

யாழ்.அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் மருத்துவ பெருமளவு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதை கண்டித்து நல்லுார் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் வீதி ஏ- 9 பிரதான வீதியை மறித்து போராட்டம் நடத்தியுள்ளனர். 

இதனால் 30 நிமிடம் ஏ- 9 வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது. செம்மணி பகுதியில் பெருமளவு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. குறித்த மருத்துவ கழிவுகள் அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்பட்ட மருந்து பொருட்களின் கழிவுகள் என நல்லுார் பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கூறுகின்றனர். 

இந்நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து ஏ – 9 வீதியை வழிமறித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மக்களால் தொிவு செய்யப்பட்ட அதிகாரமுள்ள பிரதேசசபை உறுப்பினர்கள் நீங்களே மக்களுக்கு பொறுப்புகூறவேண்டும்.

அவ்வாறிருக்க நீங்கள் எப்படி வீதியை மறித்து போராடலாம்? என கேள்வி எழுப்பியதுடன் பிரதேசசபை உறுப்பினர்களை வீதியிலிருந்து அகற்றினர். இதனையடுத்து குறித்த விடயத்தை சட்டரீதியாக அணுகுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் சம்பவ இடத்திற்கு வருகைதந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த விடயம் தொடர்பாக மருத்துவ கழிவுகளை கொட்டவர்கள் அடையாளம் காணப்படவேண்டும். அதன் பின்னர் சட்டரீதியான நடவடிக்கைக்கு செல்லாம் என சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

பகிர்ந்துகொள்ள