மியன்மாரில் 23பேர் படுகொலை!

You are currently viewing மியன்மாரில் 23பேர் படுகொலை!


மியன்மாரில் இராணுவப் புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18  பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டுள்ளனர்.

யாங்கூன் நகரின் ஹ்லெய்ங் தார்யார் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடிகள் மற்றும் கத்திகளை பயன்படுத்தியதையடுத்து, படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

யாங்கூன் நகரில் இன்று  இந்நிலையில் இன்று 18 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி நடத்தப்பட்ட இராணுவப் புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையை படையினர் ஆரம்பித்ததையடுத்து இதுவரை 80 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மியன்மாரில் இரு இடங்களில் இன்று இராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. யாங்கூனின் ஹ்லெய்ங் தார்யார் மற்றும் ஷ்வேபிதா நகரங்களில் இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

ஆனாலும் பிறிதொரு செய்தில் 23 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரியவருகின்றது

பகிர்ந்துகொள்ள