மீண்டும் ஆரம்பித்த மீட்புப்பணிகள்! நம்பிக்கையை கைவிடாத மீட்புக்குழு!!

You are currently viewing மீண்டும் ஆரம்பித்த மீட்புப்பணிகள்! நம்பிக்கையை கைவிடாத மீட்புக்குழு!!

நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் 30.12.2020 அன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவின் பின்னான தொடர் மீட்ப்புப்பணிகள் இரவு பகலாக தொடர்ந்துவந்த நிலையில், மீட்புப்பணிகள் நேற்றைய தினம் மாலையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதன் பின் மீண்டும் இன்று காலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணிகளின்போது, கட்டட இடிபாடுகளுக்கிடையில் இருந்து ஒருவரது சடலம் நேற்று மீட்க்கப்பட்டிருந்த நிலையில், வேறு முன்னேற்றங்களெதையும் இதுவரை காண முடியவில்லை. எனினும், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி புதைந்து கிடப்பவர்கள் இன்னமும் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பும் மீட்புக்குழுவினர், தெடர்ந்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீண்டும் ஆரம்பித்த மீட்புப்பணிகள்! நம்பிக்கையை கைவிடாத மீட்புக்குழு!! 1
அனர்த்தம் ஏற்பட்ட குடியிருப்பு பகுதி, அனர்த்தத்துக்கு முன்னதாக…
மீண்டும் ஆரம்பித்த மீட்புப்பணிகள்! நம்பிக்கையை கைவிடாத மீட்புக்குழு!! 2
அனர்த்தம் ஏற்பட்ட அதே பகுதி இப்போது…

அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதி சதுப்பு நிலமாக இருந்தாலும், இடிபாடுகளுக்குள் சிக்கி துரதிர்ஷ்டவசமாக புதைந்து போனவர்கள், இடிபாடுகளுக்கிடையில் இருக்கக்கூடிய காற்றை சுவாசிப்பதால், மேலும் சில நாட்களுக்கு உயிரோடு இருக்கும் வாய்ப்பு இருப்பதாக மீட்ப்புக்குழுவின் மருத்துவ அணி திடமாக நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

சதுப்புநில மற்றும் களிமண்ணால் சூழப்பட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்படும்போது, பெரும்பாலும் மண் திரவத்தன்மையோடு இருப்பதால், அவற்றுக்குக்கிடையில் சுவாசத்திற்கு தேவையான காற்று செல்வது சாத்தியமில்லை என்றாலும், வீடுகளின் இடிபாடுகள் மண்ணோடு கலந்திருப்பதால், இடிபாடுகள் ஊடாக சுவாசத்திற்கான காற்று செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதன் அடிப்படையிலேயே மீட்புக்குழு நம்பிக்கையோடு செயற்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள