மீண்டும் சிறீலங்காவை காப்பாற்ற களமிறக்கப்படும் கருநாகங்கள்!!

You are currently viewing மீண்டும் சிறீலங்காவை காப்பாற்ற களமிறக்கப்படும் கருநாகங்கள்!!

தமிழ் தேசம் மீதான இனஅழிப்பினை மூடி மறைக்க மீண்டும் தாயக மற்றும் புலம்பெயர் தரப்புக்கள் மும்மூரமாகியுள்ளன.

நடந்த இன அழிப்பினை போர்க்குற்றங்களுள் மறைத்துவிட கடந்த நல்லாட்சி அரசில் முனைப்பாக இருந்த தரப்புக்கள் தற்போது கோத்தபாயவை காப்பாற்ற அதே நாடகத்தை தொடங்கியுள்ளன.

வருடத்திற்கொரு பெயரில் களமிறங்கும் இத்தரப்புக்கள் இவ்வாண்டு இலங்கை: நீதிக்கான தேடல், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக உரிமைகள்” பெயரில் களமிறங்கியுள்ளன.

இது தொடர்பான முதலாவது பிரச்சார கூட்டத்தில் எம். ஏ. சுமந்திரனுடன், ஐ. நா.வின் முன்னாள் உப செயலாளர் நாயகம் சார்லஸ் பெற்றி, போர் குற்றங்களுக்கான அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீபன் ராப், ஐ. நா.வின் நிலைமறுகால நீதிக்கான முன்னாள் விசேட அறிக்கையாளர் பப்லோ டி க்ரீப் மற்றும் இலங்கையைச் சேர்த்த நிபுணர்கள்(?) பங்குபற்றும் கலந்துரையாடலை அறிவித்துள்ளனர்.

குறிப்பாக ஜெனீவாவில் இலங்கையை காப்பாற்ற பாடுபட்ட பவானி பொன்சேகா மற்றும் அம்பிகா(நடிக்கையல்ல) சுமந்திரன் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள