முதலாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தல் வெற்றி – ஹெட்மயர், ஹோப் சதம் அடித்தனர்.

  • Post author:
You are currently viewing முதலாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தல் வெற்றி – ஹெட்மயர், ஹோப் சதம் அடித்தனர்.

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில், 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது.

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் துடுப்பாட்ட அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்திய அணியில் அறிமுக வீரராக ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே சேர்க்கப்பட்டார்.

சென்னையில் நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் ஹெட்மயர், ஹோப் ஆகியோரின் சதங்களின் உதவியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 இலக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பகிர்ந்துகொள்ள