முதல் முறையாக வாடகைத் தாய் மூலம் பிறந்த சிறுத்தை குட்டிகள்!

  • Post author:
You are currently viewing முதல் முறையாக வாடகைத் தாய் மூலம் பிறந்த சிறுத்தை குட்டிகள்!

உலகில் முதல் முறையாக வாடகைத் தாய் மூலம், சிறுத்தை குட்டிகள் பெற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்போதைய நாகரீக உலகில் குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் பல்வேறு வழிகளில் செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றெடுப்பது சாத்தியமாகிவிட்டது. அதில் கருத்தரிக்க முடியாத பெண்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் முறையும் ஒன்றாகும்.

இந்த நிலையில் உலகில் முதல் முறையாக விலங்குகளில் இவ்வகை செயற்கை கருத்தரித்தல் மருத்துவ முறையை உபயோகித்து சாதனை படைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் டெலாவேர் நகரில் உள்ள கொலம்பஸ் உயிரியல் பூங்காவில் கிபிபி என்ற 6 வயது சிறுத்தை உள்ளது. ஒரு சில மருத்துவ காரணங்களால் கிபிபி தாய்மை அடைய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

இதையடுத்து விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிபிபியின் சினை முட்டைகளை பிரித்து, ஆய்வகத்தில் கரு உற்பத்தி செய்து அதை இஸ்ஸி என்ற 3 வயது சிறுத்தையின் கருப்பைக்குள் செலுத்தினர்.

3 மாதங்களுக்கு பிறகு தற்போது இஸ்ஸி, ஒரு பெண், ஒரு ஆண் என அழகான 2 குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த குட்டிகளும் வழக்கமான முறையில் பிறக்கும் சிறுத்தை குட்டிகளை போலவே நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விலங்குகளில் செயற்கை கருத்தரித்தலை உபயோகிக்கும் சோதனை முயற்சியை விஞ்ஞானிகள் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக வெற்றிகண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள