முன்னணி நாடுகளை வம்புக்கு இழுக்கும் சீனா!

You are currently viewing முன்னணி நாடுகளை வம்புக்கு இழுக்கும் சீனா!

தென் சீனக் கடல் பகுதியில் தனது போர் விமானம் ஒன்றை சீனப் போர் விமானம் ஒன்று இடைமறித்ததாக ஆவுஸ்திரேலியா குற்றஞ்சாட்டியுள்ளது. தென் சீனக் கடல் பிராந்தியத்தின் பெரும்பகுதிகளை சீனா தனது சொந்த பிரதேசமாக உரிமை கோரி வரும் நிலையில், இதனை அமெரிக்கா, ஆவுஸ்திரேலியா மற்றும் சில அண்டை நாடுகள் பகிரங்கமாக எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் மே 20ம் திகதி வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஆவுஸ்திரேலிய விமானப்படை P-8 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை, சீன ஜே-16 ரக போர் விமானம் இடைமறித்து தீப்பிழம்புகளை வெளியிட்டு அதன் பாதையில் இருந்து வெளியேறியதாக ஆவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீன ஜெட் விமானமானது, ஆவுஸ்திரேலிய விமானத்தின் எஞ்சினுக்குள் நுழைந்து சாஃப் ரேடார் சாதனத்தை எதிர்க்கும் சிறிய அலுமினிய துண்டுகளை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.

சீன ஜெட் விமானத்தின் இந்த செயல் P-8 விமானம் மற்றும் அதன் பணியாளரின் பாதுகாப்பை அச்சுறுத்தும் செயல் எனவும் ஆவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால், இந்த சம்பவம் குறித்து பெய்ஜிங் எத்தகைய பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

தங்களது போர் விமானத்தை சீன போர் விமானம் இடைமறித்து நின்றதாக ஆவுஸ்திரேலியா குற்றம்சாட்டுவதற்கு முன்பு, கொரிய கடற்பரப்பிற்கு மேல் பறந்த கனேடிய போர் விமானத்தை சீன இதற்கு முன் இதைப்போல இடைமறித்து அதன் வான்பாதையில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கனடா குற்றங்சாட்டி இருந்தது குறிப்பிடதக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments