முற்றாக முடங்கும் ஜெர்மனி! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing முற்றாக முடங்கும் ஜெர்மனி! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், நாட்டை முடங்குநிலைக்கு கொண்டுவரவேண்டி இருப்பதாக ஜெர்மனியின் அதிபர் “Angela Merkel” அம்மையார் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் இதுவரை கையாளப்பட்ட “கொரோனா” கட்டுப்பாடுகளால், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையென தெரிவித்திருக்கும் அவர், 16.12.2020 இலிருந்து, 10.01.2021 வரை நாட்டை முற்றான முடங்கு நிலைக்கு கொண்டு வரப்போவதாக, 13.12.2020 அன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

  1. வீடுகளைத்தவிர, பொதுவெளிகளில் மதுபாவனை முற்றாக தடை செய்யப்படும்.
  2. அத்தியாவசிய தேவைகளுக்கான அங்காடிகளையும், மருந்தகங்களையும் தவிர, ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படும்.
  3. நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்படும்.
  4. தொழில் வழங்குநர்கள், தமது பணியாளர்கள் வீடுகளில் இருந்தபடியே அலுவலக பணிகளை கவனிக்க வசதியாக அனைத்து ஏற்படுகளையும் செய்துகொடுக்க வேண்டும்.

ஆகிய கட்டுப்பாடுகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன.

“கொரோனா” பாதிப்பால் ஜெர்மனியில் இதுவரை 22.000 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள