முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டம்!

You are currently viewing முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டம்!

சுயநிர்ணய அடிப்படையிலான தமிழர் தேசம் மட்டுமே தமிழினத்தின் பாதுகாப்பு – நடராஜா காண்டீபன்

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டம்! 1

வடக்கு கிழக்கு தாயகம் எங்கும் தன்எழுர்ச்சி  போராட்டங்களை ஒழுங்குபடுத்தி இன்றைய தினத்தை தமிழர்களுடைய கரி நாளாக பிரகடனப்படுத்தி நாங்கள் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை சொல்லி இருக்கின்றோம் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படுகின்ற இந்த சிறிலங்கா தேசத்திடம் ஆட்சி அதிகார தத்துவத்தை பிரித்தானிய காரணியத்துவம் வழங்கியிருந்த சூழலிலே சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளிலே ஆட்சி அதிகாரம் சென்றதும் அவர்களுடைய ஒடுக்கு முறை அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது.

1948 ஆம் ஆண்டுகளில் இருந்து தமிழர்களுடைய தாயக பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டு  சிங்கள குடியேற்றங்களை நிறுவி அதன் மூலமாக தமிழர் தாயகத்தை சிதைத்து வருகின்ற போழுது தமிழர் தலைவர்களும் சிங்கள தலைவர்களும் தமிழ் தேசத்தின் உடைய இறைமையை வேண்டி ஒப்பந்தங்களை செய்தது வரலாறு. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் கிழித்தறியப்பட்டதன் பின்பாக எங்களுடைய தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய விடுதலைப் போராட்டம் எங்களுடைய தாயக சுதந்திரத்தை வேண்டி சர்வதேச அரங்கிலே இன்றைக்கு நிறுத்தப்பட்டிருக்கின்றது.  எங்களுடைய மக்கள் பச்சை பச்சையாக முள்ளிவாய்க்கால் மண்ணிலே முல்லை தீவு மாவட்டத்திலே இனவழிப்பு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த இன அழிப்புக்கான சர்வதேச நீதியைக் கோரி நாங்கள் இன்று பேரிழ்ச்சியாக இன்றைக்கு எங்களுடைய வடகிழக்கிலே  இருக்கின்ற தமிழ் மக்கள் பேரழிச்சியாக தமிழர் தேசமாக எழுச்சி கொண்டிருக்கின்றார்கள். நிச்சயமாக சிங்களவர்கள் உடைய அல்லது சிறிலங்கா தேசத்தின் உடைய சுதந்திர தினம் என்பது தமிழர்களுடைய  தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற பொழுது மட்டுமே தான் அது உண்மையான சுதந்திர தினமாக இருக்க முடியும்.

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டம்! 2

தமிழர்களுடைய சுதந்திரம் எங்கே சிங்கள தேசத்தினால் அங்கீகரிக்கப்படுகின்றதோ சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்படுகின்றதோ  அன்றுதான் சிறிலங்கா தேசத்திலும் அந்த சுதந்திர தினத்தை உண்மையான சுதந்திர தினமாக கொண்டாட முடியும் மாறாக தமிழருடைய தேசத்தின் சுதந்திரத்தை அடக்கும் தமிழருடைய தேசத்தின் உடைய விடுதலையை ஒடுக்குகின்ற வகையிலே இடம்பெறுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் எங்களுடைய விடுதலை போராட்டத்தின் உடைய ஆயுத விடுதலை போராட்டமாக இருக்கலாம்  சாத்வீக வகையான போராட்டமாக இருக்கலாம் அந்தப் போராட்டங்கள் அனைத்துமே எங்களுடைய பிரச்சனையை சர்வதேச மத்தியிலே இன்று கொண்டு சேர்த்திருக்கின்றது இனப்படுகொலைக்கான நீதியை நாங்கள் சர்வதேசத்திடம் வேண்டி இருக்கின்றோம். எங்களை அழித்த சிங்கள பௌத்த பேரினவாத சிங்கள தேசத்திடம் எங்களுடைய பாதுகாப்பை கொடுக்க முடியாது அந்த வகையிலே நாங்கள் சொல்கின்றோம் எங்களுடைய தேசத்தின் பாதுகாப்பு என்பது நாங்கள் கோரி நிற்கின்ற சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தமிழருடைய தேச அங்கீகாரத்தின் போது மட்டுமே தான் எங்களுடைய இனத்தினுடைய பாதுகாப்பை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments