முள்ளிவாய்க்கால் எங்களுக்கு முகவரியாகும்.

You are currently viewing முள்ளிவாய்க்கால் எங்களுக்கு முகவரியாகும்.

பாறாங் கல்லெனவே தமிழர் நெஞ்சில் ஆறாமற் கிடக்கிறது முள்ளிவாய்க்கால். நீறாகத் தெரிந்தாலும் அகதனுள்ளே வலிகள் நெருப்பாக இன்னும் நீண்டு கிடக்கிறது. 
ஆண்டென்ன பதினொன்றே ஆகிறது ஆனால்மாண்டவரின் மனவோலம் மறக்குதில்லை நாளும் வண்ணமுறு வயல்வெளிகள் தோறும் வாடிஉண்ணவழியின்றி உழன்றநாள்கள் போமோ.


பாலடையும் நறுநெய்யும் உண்டவெம்  பாலர் ஞாலமெல்லாம் பார்த்திருக்க நலி வுற்றாரேகோலமது குலைந்தெங்கள் கூடு சாயகாலமது வந்ததுவே காவுகின்ற காலனாக..
வீரமில்லாச் சோடையர்கள் சேர்ந்து வந்து தீரமிகு திடந்தோளை வெல்ல வென்று ஈரமிலா நெஞ்சினிலே நஞ்சு கொண்டு ஊரெல்லாம் கொளுத்தி உவகை கொண்டார். 


குண்டுகளால் எம்மினத்தை கொன்று போட்டார்எண்ணற்ற நோயுடையோர் இறந்து பட்டார்கண்ணீரால் காத்தபயிர் கருகி வாட எம்மண்ணிலேயே மரணங்கள் மலிய வைத்தார். 
ஏட்டைக் கொளுத்தி எரித்த வானரங்கள்நாட்டுக்குள் வந்துவந்து நஞ்சும் விதைத்தார். காட்டைக் கருக்கினர் அக்கயவர் மேலும்காற்றிலும் கந்தகம் விதைத்தனர் மீறி.


கொள்ளி கொடுத்தான் ஒருவன் தமிழரைகூறுபோடச் செய்தான் இன்னொருவன் அள்ளிவந்து அடைத்து அரையுயி ராக்கிகிள்ளியெறி உயிரை என்றான் மற்றொருவன். 
இச்சைகொண் டெம் மினத்தை இழித்துஏந்திழைகள் மானத்தைத் தான் பறித்துதீச்செயல்கள் செய்தவரின் திசைகள் பார்த்துதேய்ந்தகுரலெடுத்து தேம்பி நின்றோம்..


தாய்த்திரு நாடாம் எம் தமிழர் தேசம் தரணியிலே தளைத்தோங்க வேண்டுமென்றுதங்களுயிர் தந்துசென்ற தமிழர் உயிர்கள்தாகமது தணியும்வரை மறக்க மாட்டோம். 
காணாமற் போனோரின் கண்ணீராலே எம்கடலெல்லாம் நிறைகிறது கண்டோம் நாங்கள். வீணாகப்போகாது விதைத்த உடல்கள் நிலம்வெல்லும்வரை ஓயமாட்டார் உலகத் தமிழர்.  


முகமிழந்த நகரமல்ல எம் முள்ளிவாய்க்கால் மதுரையை எரித்துவிட்டு கண்ணகியாள் தன்மன அமைதி கொண்டாளதை மறக்கமாட்டோம். முகவரியாய் முள்ளிவாய்க்கால் மாறா திருக்கும்.       

ஆதிலட்சுமி சிவகுமார்.

பகிர்ந்துகொள்ள