மேலாதிக்கத்தின் அடையாளங்கள் ; சர்ச்சைக்குரிய சிலைகள் விழுகின்றன!

  • Post author:
You are currently viewing மேலாதிக்கத்தின் அடையாளங்கள் ; சர்ச்சைக்குரிய சிலைகள் விழுகின்றன!

19 ஆம் நூற்றாண்டில் (1800-களில்)அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அடிமைத்தனத்தை நிலைநிறுத்த விரும்பிய, அதற்காக போராடிய தளபதிகள் மற்றும் இராணுவ வீரர்களின் சிலைகள் ஆவேசமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் இடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றன.

வியாழன் இரவு , வர்ஜீனியாவின் ரிச்மண்டில் (Richmond) கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் தெற்கு மாநில அதிபர் ஜெபர்சன் டேவிஸின் (Jefferson Davis) சிலை இடிக்கப்பட்டது, அதே நேரத்தில் போர்ட்ஸ்மவுத்தில் (Portsmouth) பல சிலைகளின் தலைகழும் துண்டிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலாதிக்கத்தின் அடையாளங்கள் ; சர்ச்சைக்குரிய சிலைகள் விழுகின்றன! 1

சார்லோட்டிலுள்ள (Charlotte) வட கரோலினா பல்கலைக்கழகத்தின் அமெரிக்க வரலாற்று பேராசிரியர் கரேன் எல். காக்ஸ் (Karen L. Cox) கூறுகையில், “இனி வெள்ளை சக்தி இல்லை” போன்ற சொற்களைக் கொண்ட எழுத்துக்களை இந்தச் சிலைகளின் சுவர்களில் வரைவதே இருக்கக்கூடிய மிகச் சிறந்த சந்தர்ப்பமாக இருக்கும் என்றார்.

CNN இல் வெளியிடப்பட்ட ஒரு நாளேட்டில், நினைவுச்சின்னங்கள் கட்டப்படவேண்டிய பின்னணி குறித்து ஒரு புத்தகத்தை எழுதிய பேராசிரியர், நீதிமன்றங்கள், பூங்காக்கள் மற்றும் பள்ளி முற்றங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து அவற்றை அகற்ற வேண்டும் என்று வாதிட்டுள்ளார். அவை இனவெறி மற்றும் வெள்ளை மேலாதிக்கத்தின் வலுவான அடையாளங்கள் என்று அவர் நம்புவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள