மைதானத்தை கைப்பற்ற துடிக்கும் வனவளத் திணைக்களம்!

  • Post author:
You are currently viewing மைதானத்தை கைப்பற்ற துடிக்கும் வனவளத் திணைக்களம்!

வவுனியா நாலாம்கட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தாம் மைதானமாக பயன்படுத்திய பகுதியை இன்றையதினம் துப்புரவு செய்ய சென்றபோது வனவள திணைக்களம் அதற்கு தடையை ஏற்படுத்தியமையால் சற்றுநேரம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர் 2007 ஆம் ஆண்டளவில் இடம்பெயர்ந்த நிலையில் அதில் சிறிய இராணுவசாவடி ஒன்று அமைக்கப்பட்டது. அதன்பின்னர் குறித்த பகுதியை அபகரிப்பதற்கு பலர் முயற்சி செய்தபோதும் மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது குறித்த பகுதி பற்றைவளர்ந்து காடு மண்டி கிடக்கின்றது. இதனை மீண்டும் மைதானமாக பயன்படுத்துவதற்காக இன்றையதினம் இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி அதனை துப்புரவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன்போது அப்பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள், இது தமது திணைக்களத்திற்கு உரிய பகுதி என்று தடை ஏற்படுத்தியமையால் இளைஞர்களிற்கும் அவர்களிற்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்ன வருகை தந்திருந்தார்.இருதரப்புடனும் கலந்துரையாடிய அவர் குறித்த பகுதியை மைதானமாக பயன்படுத்துவதற்கான வேண்டுகோளை எழுத்துமூலமாக வழங்குமாறு தெரிவித்ததுடன் அதனை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முன்வைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியழிக்கப்பட்டமைக்கமைய குழப்பம் முடிவிற்கு வந்தது.

பகிர்ந்துகொள்ள