யானை லத்தி (கழிவு) யிலிருந்து “ஜின்” மதுபானம்! தென்னாபிரிக்க – பிரித்தானிய தம்பதிகளின் கண்டுபிடிப்பு!!

You are currently viewing யானை லத்தி (கழிவு) யிலிருந்து “ஜின்” மதுபானம்! தென்னாபிரிக்க – பிரித்தானிய தம்பதிகளின் கண்டுபிடிப்பு!!

யானைகளின் மலக்கழிவை இணைத்து “ஜின்” மதுபானவகையை தயாரிப்பதில் தென்னாபிரிக்க – பிரித்தானிய தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

தாவர வகைகளையே உண்ணும் யானைகளின் மலக்கழிவுகளில் ஏராளமான தாவரச்சத்துக்கள்நிறைந்திருப்பதாகதென்னாபிரிக்க வழிகாட்டியொருவரிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலைஅடிப்படையாக வைத்து ஆய்வில் ஈடுபட்ட மேற்படி தம்பதியினர்அதில் வெற்றியும் பெற்றனர்.

யானைக்கழிவுகள் பலதடவைகள் சுத்தம் செய்தும்உலர்த்தியும் அதிலிருந்து பெறப்பட்டதாவரச்சத்துக்களை பயன்படுத்தி சுவையூட்டப்பட்ட “ஜின்” மதுபானவகையை உற்பத்தி செய்தஇத்தம்பதியினர்குறித்த மதுபானவகையானது வித்தியாசமான விரும்பத்தக்க சுவையோடுஇருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

“Indlovu Gin” என்று பெயரிடப்பட்ட இந்த மதுபானவகை முதற்கட்டமாக 6000 லீட்டர்கள்மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டுஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில்சந்தைப்படுத்தப்பட்டபோது பெரும் வரவேற்பை பெற்றதாக சொல்லப்படுகிறது.

இதேவேளைகுறிப்பிட்ட ஒரு வகையான புழுக்களை உலர வைத்து அவற்றை தூளாக்கி மாவோடுகலந்து செய்யப்பட்ட வெதுப்பி (பாண்நோர்வேயில் சந்தைப்படுத்தப்பட்டிருந்ததும்குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள