யாழில் பாடசாலை நிர்வாகத்தால் மாணவிக்கு தொல்லை- மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

You are currently viewing யாழில் பாடசாலை நிர்வாகத்தால் மாணவிக்கு தொல்லை- மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர்,தனது பாடசாலைச் சமூகத்தின் தொந்தரவால் ,தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறித்த மாணவி கருத்து தெரிவிக்கையில்:

அன்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி ஒன்றுகூடல் ஒன்று மாணவர்கள் மட்டத்தில் இடம்பெற்றது.

இதன் போது மை விசிறி விளையாடினோம்.ஆனால் நான் மட்டும் ஏதோ தவறு செய்ததை போன்று பாடசாலை நிர்வாகம் என்னை விசாரணைக்கு அழைத்தது.அதிபரும் என்னை அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டினார்.

அதன் பின்னர் மை விசிறிய செயற்பாட்டை வைத்துக்கொண்டு வகுப்பறையிலும் சரி.வெளியிலும் சரி ஆசிரியை ஒருவர் என்னை மோசமாக திட்டுவார்.தீய நடத்தை உள்ள மாணவி என்று என்னை கருதி,பாடசாலைச் சமூகம் இவ்வாறு என்னை கொடுமை படுத்தினர்.

இதனால் நான் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன்.இது பற்றி எனது அம்மாவுக்கும் தெரியப்படுத்தினேன்.இறுதியாக பாடசாலையை விட்டு வெளியேறுவதற்கு ,விடுதலை சான்றிதழ் கேட்டபோது ,அதில் நடத்தை சரியில்லை என்ற தகமைச் சான்றிதழ் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் வேறு இடத்தில நான் கல்வியை தொடர முடியாத நிலையில்,மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன்.இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துளேன் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments