யாழில் விபத்தில் சிக்கி 22 வயது இளைஞன் உயிரிழப்பு!

You are currently viewing யாழில் விபத்தில் சிக்கி 22 வயது இளைஞன் உயிரிழப்பு!

யாழ்.கொட்டடி லைட் அண்ட் சந்திப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொட்டடி லைடன் சந்தி பகுதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து கொட்டடி நோக்கி வேகமாக பயணித்த உந்துருளி வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

உந்துருளியில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் யாழ்ப்பாண பிரதேசத்தை 22 வயதுடைய றொபிக்‌ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் சிறீலங்கா காவற்துறையினர்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments