யாழ்ப்பாணத்தில் 61 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு இன்று சீன தடுப்பூசி!!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் 61 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு இன்று சீன தடுப்பூசி!!

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்குக் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று 61கிராம அலுவலர் பிரிவுகளில் ஆரம்பமாகவுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்படும் இடங்களுக்குத் தடுப்பூசி மருந்து வழங்கலில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

“இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. காலை 8 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை ஒரு அமர்வும், அதன் பின்னர் பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரை இன்னொரு அமர்வும் நடைபெறவுள்ளது.

அதனால் பொதுமக்கள் தங்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு என ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு மாத்திரம் அந்த இடங்களுக்கு வருகை தந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு கிராம அலுவலர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களால் தங்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என உறுதிப்படுத்தினால் மாத்திரமே தடுப்பூசி வழங்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும். எனவே, நீங்கள் தேவையில்லாது அலையாது தங்களுக்குரிய வழிகாட்டல் கிடைத்த பின்னர் தடுப்பூசி வழங்கும் இடத்துக்குச் செல்ல முடியும்.

கொரோனா தடுப்பூசி ஏற்றலுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தெரிவு செய்யப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை வருமாறு:-

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவின் கீழ் ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கும், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 16 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 13 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 5 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 4 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கும், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 5 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 10 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும்,

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 3 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 2 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் தடுப்பூசி முதற்கட்டமாக ஏற்றப்படவுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments