யாழ்ப்பாண மக்கள் கடல் உணவை சாப்பிட முடியாத நிலை ஏற்படும்!

You are currently viewing யாழ்ப்பாண மக்கள் கடல் உணவை சாப்பிட முடியாத நிலை ஏற்படும்!

யாழ். குடாக்கடலில் அதிகரித்துவரும் கடல் அட்டைப் பண்ணைகளால் சில வருடங்களில் யாழ்ப்பாண மக்கள் தமக்குத் தேவையான கடல் உணவைப் பெற முடியாத திண்டாட்ட நிலைக்கு தள்ளப்படுவார்கள் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

யாழ். குடாக்கடலின் பரப்புப் பகுதிகளில் மீன் இனங்கள் இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் பகுதிகளாக காணப்படுகிறது. இந்நிலையில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பதற்காக குறித்த பகுதிகள் அடையாளப் படுத்தப்பட்டு வருவதோடு பல பகுதிகளில் அட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சிலர் நினைக்கிறார்கள் பரப்புக் கடல் சும்மா இருக்கிறது அதில் அட்டைப் பண்ணை அமைத்தால் என்ன என நினைக்கிறார்கள்.

யாழ். குடாவின் பரப்பு கடல் பிரதேசத்தில் எமது மூதாதையர்கள் தொடக்கம் தற்போது வரை இயற்கையாகவே இறால் உற்பத்தி இடம்பெறுவதோடு மீன்கள் உற்பத்தியாகி ஆழ்கடலுக்குச் செல்லும் பகுதியாகவும் காணப்படுகிறது.

இவ்வாறு இயற்கையாகவே இறால் உற்பத்தி இடம்பெறும் பகுதியாக தீவகக் கடல் பரப்புப் பகுதி காணப்பட நிலையில் செயற்கையாக இறால் பண்ணைகளை அமைப்பதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள்.

எமது வளமான கடப்பகுதில் முறையாற்ற விதத்தில் அட்டை பண்ணைகள் அமைத்து எமது கடல் வளத்தையே நாசப்படுத்தும் செயற்பாடு மிகவும் வேகமாக இடம்பெற்று வருகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் அதிகரிக்குமானால் யாழ் மாவட்ட மக்களுக்கு தேவையான கடல் உணவை சில வருடங்களில் பின் பெற முடியாத துப்பாக்கிய நிலை ஏற்படும்.

ஏனெனில் குடாக் கடலின் பரப்புக் கடல் களை இலக்கு வைத்து அட்டைப் பண்ணைகள் பெருகுவதால் மீன்கள் உற்பத்தியாகும் இடங்கள் தடுக்கப்படுவதோடு நீரோட்டங்களும் தடுக்கப்படுகிறது.

நாங்கள் அட்டைப் பண்ணைக்கு எதிரானவர்கள் அல்ல பண்ணை அமைக்கும் போது கடலை மாசு படுத்தாமலும் மீன் இனங்கள் பெருகக்கூடிய பகுதிகளை விடுத்து அட்டை பண்ணைகளை அமைக்க வேண்டும்.

அட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கும் நெக்டா நிறுவன அதிகாரி மீனவ சங்கங்களுடன் பேசும்போது அட்டப்பண்ணை பாதகமானது எனக் கூறுகின்றார் துறை சார்ந்த அமைச்சருக்கு முன்னால் பேசும்போது இன்னொரு விதமாக பேசுகிறார்.

மீனவர்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் சட்டமாக ஆக்கப்பட்டு அதிகாரிகளில் மேசைகளில் இருக்கிறது கடலிலேயே சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்து வருகிறது.

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கரை வலை மீன்பிடி தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரித்து வருவதாக அப் பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

குறித்த பகுதிகளில் கரை வலை தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களாக காணப்படாத நிலையில் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு உரியதரப்பினர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

நாட்டின் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் கடற் தொழில் அமைச்சரிடம் நாம் வினயமாக கேட்டுக் கொள்வது எமது மீன்பிடி தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அட்டை பண்ணைகள் மற்றும் கடலை மாசுபடுத்தும் பண்ணைகளை அகற்ற வேண்டும்.

மேலும் எமது கடல் வளம் எமது மக்களுக்கே பயன்பட வேண்டும் அவ்வாறில்லாமல் அட்டை பண்ணை என்ற போர்வையில் எமது கடலை நாசப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments