யாழ். – சீன மக்களுக்கு இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் – யாழில் சீன தூதுவர் கீ சென்ஹொங்!

You are currently viewing யாழ். – சீன மக்களுக்கு இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் – யாழில் சீன தூதுவர் கீ சென்ஹொங்!

யாழ் மக்களுக்கும் சீன மக் களுக்குபிடையில் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் என யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.

யாழ் பொது நூலகத்திற்கு வருகைதந்துபார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளேன். நீண்ட கால வரலாற்றினைக் கொண்ட யாழ் பொது நூலகத்திற்கு பார்வையிட்டதையிட்டு நான் மகிழ்வடைகிறேன். யாழ் நூலகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் மற்றும் யாழ் மாநகரசபை ஆணையாளருடன் கேட்டு தெரிந்து கொண்டேன்.

எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாண மக்களுக்கும் சீன மக்களுக்குபிடையில் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் என்றார்.

யாழ் மாநகர முதல்வர் கருத்து தெரிவிக்கும் போது,

சீன நாட்டின் தூதுவர் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு கணணிகளையும் சில புத்தகங்களையும் நமக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு நமது நூலக அபிவிருத்தி தொடர்பில் பல விடயங்கள் கேட்டறிந்து கொண்டார். அதற்கு நாம் நூலகத்தின் நிலைமைகள் தொடர்பில் வரலாறுகளை விளங்கப்படுத்தியதோடு இந்த நூலகத்தினை(E நூலகமாக) எலக்றோனிக் நூலகமாக மாற்ற நடவடிக்கை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். அதற்கு உங்களால் உதவ முடியுமா என வினவிய போது நாங்கள் அதற்கு உதவ முடியும் எனவும் சாதகமான பதிலை தெரிவித்ததாக தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments