யாழ்.நகரில் 34 குடும்பங்கள் உள்ளிட்ட 10 இடங்கள் முடக்கம்!

You are currently viewing யாழ்.நகரில்  34 குடும்பங்கள்  உள்ளிட்ட 10 இடங்கள் முடக்கம்!

யாழ்.காரைநகரில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரினால் யாழ்.நகரில் மட்டும் 34 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், மாவட்டத்தில் 99 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.மாநகர பிரதி முதல்வர் துரைராசா ஈசன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், அபாய பிரதேசங்களில் இருந்து எமது மாவட்டத்திற்கு வருவோர் சற்று சமூக பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். அதேபோல் பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் அபாய பிரதேசங்களில் இருந்து வருவோர் குறித்து அவதானமாக இருக்கவேண்டும். 

ஒருவருடைய பொறுப்பற்ற செயலினால் யாழ்.மாவட்டத்தில் 99 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்.நகரில் மட்டும் ஒரு வைத்தியசாலை உள்ளிட்ட 9 வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளது. குறிப்பாக நொதேண் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, 

ரொப்பாஸ், பிரகாஸ் ரான்ஸ்போட், ஓட்டுமடம் மடத்தடி கராச், யாழ் வைத்தியசாலை கீழ் பகுதி, றொலக்ஸ் வெதுப்பகம், குமாரசாமி புடவையகம், தென்றல் புத்தகசாலை, பி.பி.ரி ட்றான்ஸ்போட் என 10ற்கும் மேற்பட்ட இடங்கள் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது. 

தொடர்ந்தும் விசாரணைகள் நடக்கிறது. இது ஒரு தனி மனிதனால் வந்தது. அவர் மீத மட்டுமல்லாமல் மக்களுக்கும் இதில் பொறுப்புள்ளது. எதிர்காலத்திலாவது அபாய பிரதேசங்களில் இருந்து வருவோர் மீது மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும். என அவர் மேலும் கூறினார். 

பகிர்ந்துகொள்ள