யாழ் யுவதியை கொலை செய்த வைத்தியருக்கு எதிராக தந்தை போராட்டம் !

You are currently viewing யாழ் யுவதியை கொலை செய்த வைத்தியருக்கு எதிராக தந்தை போராட்டம் !

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை வைத்தியரொருவரும், மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்துள்ளதாகவும், எனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டுமெனக் கோரியும் தந்தையாரொருவர் வட தமிழீழம் , யாழ். மருதனார்மடம் சந்திக்கு அருகில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலை ஆரம்பமான குறித்த போராட்டத்தில் உயிரிழந்த தனது மகளின் புகைப்படம் மற்றும் எனது மகளின் மரணத்துக்கு நீதி வேண்டுமென எழுதப்பட்ட சுலோகத்தைத் தமது கைகளில் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் தந்தையார் இதுதொடர்பாக தெரிவிக்கையில்,

திடீர் மனநலப் பாதிப்புக்குள்ளான தனது மகள் கடந்த-2017 ஆம் ஆண்டில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் அங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு ஒரு வைத்தியரும் மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளனர்.

முக்கிய குறிப்பு:
தமிழீழப்பிரதேசம் முழுமையாக சிங்கள இனவாத அரசின் இராணுவத்தாலும் காவற்துறையினாலும் உளவுப்பிரிவினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் அவர்களிற்கு தெரியாமல் கொலைகள் கொள்ளைகள் போதைபொருள் கடத்தல்கள் கற்பழிப்புக்கள் நடைபெறமுடியாதென்பது அனைவரிற்கும் தெரிந்த விடயமாகும். சிங்கள அரசின் இனப்படுகொலையின் ஓர் பகுதியாக விளங்கும் போர்க்குற்றம், மானிடத்திற்கெதிரான குற்றம் போன்றவற்றிற்கு எதிராக ஜ.நா.வில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தமிழ்மக்கள் மீது தனிப்பட்ட ரீதியில் தாக்குதல்களை நடாத்தி போர்க்குற்றச்சாட்டுகளிற்கு சாட்சிகளாக இருப்பவர்களை அகற்றுவதையே சிங்கள இனவாத அரசு செய்கின்றது. இதை விளங்கிக்கொண்டு இவ்விடயத்தினை சர்வதேச நிறுவனங்கள் மூலம் வெளிக்கொண்டு வருவது பொறுப்பான அரசியல் தலைமைகளின் கடப்பாடாக அமைகின்றது.

பகிர்ந்துகொள்ள