ரவை மாவீரர் துயிலும் இல்லப் பகுதியை இராணுவ புலனாய்வு பிரிவு இராணுவ ஒட்டுக்குழுக்கள் சூறையாடும் ஈனச்செயல்!

You are currently viewing ரவை மாவீரர் துயிலும் இல்லப் பகுதியை இராணுவ புலனாய்வு பிரிவு இராணுவ ஒட்டுக்குழுக்கள் சூறையாடும் ஈனச்செயல்!

மட்டக்களப்பு -தரவை மாவீரர் துயிலும் இல்லப் பகுதியை இராணுவ புலனாய்வு பிரிவு இராணுவ ஒட்டுக்குழுக்கள் சூறையாடும் ஈனச்செயல் நடந்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்த தரவை மாவீரர் இல்ல ஏற்பாட்டுகுழு தலைவர் லவக்குமார், மாவீரர் துயிலும் இல்லத்திற்கு தீர்வு கிடைக்காவிடின் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளை தமிழ்தேசிய கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

“கடந்த 30 திகதியன்று மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் 500 க்கு மேற்பட்ட குழிகளை வெட்டி மரக்கன்றுகளை நாட்டுவதாகவும் அதனை வனவள திணைக்களத்தினால் செய்யப்படுவதாக மாவீரர் எற்பாட்டுக குழுவான எனக்கும் நிதர்ஷன் ஆகியோருக்கு தொலைபேசி ஊடாக தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக வனவள திணைக்கள காரியாயத்திற்கு சென்றபோது அவர்களை அதை மறுத்த நிலையில், அந்தப் பகுதிக்கு உடனடியாக நாங்கள் சென்றபோது இராணுவ புலனாய்வு பிரிவினரும் ஒட்டுக்குழுக்களும் மற்றும் பிள்ளையான் கடசியில் செயற்பாட்டில் இயங்குகின்ற கூளாவடியைச் சோந்தவரும் இணைந்து இந்த குழிகளை வெட்டிக் கொண்டிருந்தனர்.

நாங்கள் அதனை தடுத்து நிறுத்தினோம் அதன் பின்னர் 30 திகதி இரவு மீண்டும் குழிகள் வெட்டப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மிகவும் முக்கியமான தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாறான ஈனச்செயல்களை கடந்த காலங்களிலே செய்து கொண்டுவந் போது இதனை யார் செய்து கொண்டுவந்தார்கள் என்ற அறியமுடியாத சூழல் இருந்தது. ஆனால் இப்போது, தெரியவந்துள்ளது இராணுவபுலனாய்வு பிரிவும், இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்தே இந்த இதனை செய்கின்றனர் என்பது வெளிப்படையாக அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

இவ்வண்ணமாக செய்திகள் வருகின்றபோது மாற்று கட்சிகள் தடுத்து நிறுத்தியதாக ஊடகங்கள் ஊடாக புலனாய்வு பிரிவினர் செயற்பட்டு, அந்த செய்திகளை பொய்யான விதத்தில் பரப்பியிருந்தனர். அதனை செய்த ஊடகங்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஜனாதிபதி ரணில் எதிர்வருகின்ற சுததந்திர தினத்துக்கு முன்பதாக தமிழர்களுக்கு தீர்வுதருவேன் என்றும் பேச்சுக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, ஆயிரக்கணக்கான எமது புனிதர்களான மாவீரர்கள் புதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை சூறையாடுகின்ற வேலைத்திட்டத்தை மறைமுகமாக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றார்.

இவ்வாறான நிலையில், தமிழ்தேசிய கட்சிகள், தமிழ்தேசிய உணர்வாளர்கள் தமிழ் தேசத்தில் மண்பற்றுள்ள அனைவரும் ஒன்று கூடவேண்டும். ஏன்என்றால் இவ்வாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈனச்செயல்கள் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் தமிழ் தேசிய கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு போவார்களாக இருந்தால் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.

அதேவேளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு தீர்வு கிடைத்தால்தான் பேச்சுக்கு வருவோம் அல்லது வரமாட்டோம் என பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறவேண்டும் இதனை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

இது எங்கள் புனித மண் தமிழர்கள் வாழுகின்ற பூமி அந்த பூமியை மீட்டெக்க வேண்டிய கட்டாய கடமைகளும் பொறுப்பும் உத்தரவாதமும்; எங்களுக்கு இருக்கின்றது. எனவே மாவீரர் துயிலும் இல்லத்தை மீட்பதற்கான போராடம் எதிர்வரும் 4ஆம் திகதி புதன்கிழமை 10 மணிக்கு மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெறும்.

இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய கட்சிகள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், மண்பற்றாளர்கள் சிவில் சமூகங்கள், மதகுருமார்கள், புத்திஜீவிகள், மாவீரர் குடும்பம் பெற்றார்கள், அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்” என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments