ரஷ்யாவின் அறிவிப்பால் கொந்தளித்த நேட்டோ!

You are currently viewing ரஷ்யாவின் அறிவிப்பால் கொந்தளித்த நேட்டோ!

பெலாரஸில் அணு ஆயுதங்களை ரஷ்யா நிலைநிறுத்தப்போவதாக அறிவித்ததற்கு நேட்டோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெலாரஸ் நாட்டில் தமது தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப் போவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்தார்.

இதனை ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள தளங்களில் இத்தகைய ஆயுதங்களை சேமித்து வைத்திருக்கும் அமெரிக்காவின் நகர்வுகளைப் போன்றே இந்த வரிசைப்படுத்தல் இருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் நேட்டோ இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேட்டோ செய்தித் தொடர்பாளர் Oana Lungescu கூறுகையில்,

‘நட்பு நாடுகளுக்கு நேட்டோவின் அணுசக்தி பகிர்வு முற்றிலும் தவறான வழிநடத்தல் என ரஷ்யா உதாரணம் காட்டுகிறது. ஆனால், ரஷ்யாவின் தற்போதைய அறிவிப்பு பொறுப்பற்றதுடன், ஆபத்தானதும் கூட. எவ்வாறாயினும், ரஷ்யாவின் அணுசக்தி நிலைப்பாட்டில் தன்னைத்தானே சரிசெய்ய வழிவகுக்கும் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கத்திய நாடுகள் இதுவரை காணவில்லை’ என தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 3ஆம் திகதி, பயிற்சி குழுக்களைத் தொடங்கவும், சூலை 1ஆம் திகதிக்குள் தந்திரோபாய அணு ஆயுதங்களுக்கான சிறப்பு சேமிப்பு வசதியின் கட்டுமானத்தை முடிக்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments