ரஷ்யாவுக்கு உக்ரைன் விடுத்துள்ள மிரட்டல்!

You are currently viewing ரஷ்யாவுக்கு உக்ரைன் விடுத்துள்ள மிரட்டல்!

கிரிமியா தீபகற்பத்துடன் ரஷ்யாவை இணைக்கும் மிகப் பெரிய பாலத்தை சிதைத்து விடுவோம் என உக்ரேனிய முக்கிய தளபதி ஒருவர் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். விளாடிமிர் புடினின் படைகளுக்கு எதிராக உக்ரைனில் நடந்து வரும் போரில் 745-அடி கெர்ச் பாலம் தங்கள் இராணுவத்தின் முதன்மை இலக்காகக் கருதப்பட்டதாக மேஜர் ஜெனரல் டிமிட்ரோ மார்ச்சென்கோ புதன்கிழமை இரவு தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் தெற்கில் உள்ள மைகோலேவ் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு தலைமை தாங்கிவரும் தளபதி டிமிட்ரோ மார்ச்சென்கோ தனியார் செய்தி இணைய பக்கத்திற்கு அளித்த நேர்காணலில் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

2.7 பில்லியன் பவுண்டுகள் செலவிட்டு கட்டி முடிக்கப்பட்ட குறித்த பாலமானது ரஷ்யாவை பொறுத்தமட்டில் தொப்புள் கொடியை போன்றது. மேற்கத்திய நாடுகள் அதி நவீன ஆயுதங்களை தங்களுக்கு வழங்கும் எனில், உக்ரைன் இராணுவத்தின் முதன்மையான இலக்கு அந்த பாலமாக இருக்கும் என்றார்.

ரஷ்யாவுக்கு பேரதிர்வை ஏற்படுத்த வேண்டும் என்றால், குறித்த பாலம் சிதைக்கப்பட வேண்டும் என்றார் அவர். ரஷ்யாவை புறமுதுகிட்டு ஓடவிட வேண்டும் எனில், நட்பு நாடுகள் தங்களுக்கு நவீன ஆயுதங்களை அளிக்க முன்வர வேண்டும் என உக்ரைன் கோரி வருகிறது.

மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் காரணமாகவே உக்ரைன் இதுவரை ரஷ்யாவிடம் சரணடையாமல் உள்ளது. இருப்பினும், ஆபத்தான ஆயுதங்களை உக்ரைனுக்கு அளிக்க மேற்கத்திய நாடுகள் இதுவரை தயாராக இல்லை.

அவ்வாறு நடந்தால், அது எல்லைகள் கடந்து ரஷ்ய பிராந்தியங்கள் மீதான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்றே அஞ்சப்படுகிறது. மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் மேலும் பல நாடுகள் களமிறங்கக் கூடும் என்றே நம்பப்படுகிறது.

2014ம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை தனது பக்கம் இணைத்துக் கொண்டது ரஷ்யா. கெர்ச் பாலத்தின் கட்டுமானம் 2018ல் நிறைவடைந்தது. அதன் பின்னர் கருங்கடல் பகுதிக்கு துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை வழங்க ரஷ்யா கெர்ச் ஜலசந்தியைக் கடக்கும் பாலத்தைப் பயன்படுத்தி வந்துள்ளது.

ஆனால், சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்த ரஷ்யா, குறித்த பாலம் அமைந்த பகுதி வழியாகவே தாக்குதலை தொடுத்தது.

தற்போது உக்ரைன் தளபதி விடுத்துள்ள மிரட்டலுக்கு பதிலளித்துள்ள ரஷ்யா, குறித்த பாலம் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments