ரஷ்யா தொடர்பில் இரட்டை நிலைப்பாடு! ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!!

You are currently viewing ரஷ்யா தொடர்பில் இரட்டை நிலைப்பாடு! ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை பணியவைக்குமுகமாக, அமெரிக்கா, நேட்டோ மற்றும் மேற்குலக நாடுகள் இணைந்து ரஷ்யாமீது பொருளாதாரத்தடைகளை விதித்துள்ளதோடு, ரஷ்யாவிலிருந்து இறக்குமதிகளுக்கும் தடைகளை விதித்துள்ள நிலையில், டிசம்பர் 2022 இலிருந்து ஜனவரி 2023 வரையான ஒரு மாதகாலப்பகுதியில் மாத்திரம் 689 எண்ணெய்க்கப்பல்கள், ரஷ்ய எண்ணையை உலகம் முழுவதும் ஏற்றி சென்றிருக்கின்றன எனவும், இந்த 689 கப்பல்களில் 144 எண்ணைக்கப்பல்கள் , ரஷ்யா மீது பொருளாதாரத்தடைகளையும், இறக்குமதித்தடைகளையும் விதித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சென்றிருக்கின்றன எனவும் கணக்கெடுப்பொன்றை ஆதாரமாக வைத்து செய்திகள் கசிந்துள்ளன.

மிகக்கடுமையான தடைகளுக்கு மத்தியிலும், ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கான ரஷ்ய ஏற்றுமதிகள் தொடர்ந்தே வருவதால் ரஷ்யா, ஏற்றுமதிகள் மூலம் தொடர்ச்சியாக சர்வதேச வருமானத்தை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, மேற்குலகத்தை போலவே, ரஷ்யாவின்அயல் நாடான நோர்வேயும் கடுமையான பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளதோடு, ஐரோப்பிய ஒன்றியம் அவ்வப்போது எடுக்கும் முடிவுகளுக்கமைய, ரஷ்யா மீதான தடைகளை கடுமையாக்கி வருவதாக சொல்லப்படும் அதே சமயத்தில், ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படும் ரஷ்ய எண்ணைக்கப்பல்களுக்கு நோர்வே காப்புறுதி நிறுவனங்கள் காப்புறுதி வழங்குவதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

ஏற்றுமதி மூலம் ரஷ்யா வருமானத்தை பெற்றுக்கொள்வதை தடுக்குமுகமாக அமெரிக்கா, மேற்குலக நாடுகளோடு நோர்வேயும், ரஷ்யாமீது இறக்குமதித்தடைகளை விதித்திருக்கும் அதேசமயத்தில், நோர்வே நிறுவனங்கள் இவ்வாறு ரஷ்ய எண்ணெய்க்கப்பல்களுக்கு காப்புறுதி வழங்குவதானது முரண்பாடானதொன்றென கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ரஷ்யாவிடமிருந்து நோர்வே நிறுவனமொன்று பெருந்தொகை அலுமினியத்தை அண்மையில் கொள்வனவு செய்திருந்தமையும், இந்த அலுமினியம் ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டது என்றாலும், அதை காவி வந்த கப்பல் வேறொரு நாட்டுக்கு சொந்தமானது என்பதால் நோர்வேக்குள் அது அனுமதிக்கப்பட்டது என காரணம் சொல்லப்பட்டிருந்தமையும், நோர்வேயின் வடக்கு பகுதியின் கடற்பரப்பில் ரஷ்ய மீன்பிடிக்கப்பல்கள் கொண்டிவரும் மீன்களை, அப்பகுதியிலிருக்கும் நோர்வேயின் மீன் பதனிடும் தொழிற்சாலைகள் தொடர்ந்தும் கொள்வனவு செய்து வருவதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments