ரஷ்யா நடத்திய தாக்குதலில் 1,000 நகரங்கள் மற்றும் கிராமங்களில் மின் தடை!

You are currently viewing ரஷ்யா நடத்திய தாக்குதலில் 1,000 நகரங்கள் மற்றும் கிராமங்களில் மின் தடை!

உக்ரைனில் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக, கீவ் உள்ளிட்ட 1,000 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ட்ரோன் மற்றும் ராக்கெட் தாக்குதலால் ஒரே இரவில் உக்ரேனிய மக்கள் 70 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் உக்ரைனின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டன.

இதனால் கீவ் உள்ளிட்ட 1,000 நகரங்கள் மற்றும் கிராமங்களில் மின் தடையும், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், உக்ரைனின் 30% மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் பெரும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மின் உற்பத்தி பணியை சரிசெய்ய முயற்சி நடந்து வருகிறது என்றார். முன்னதாக, கிரீமியா தீபகற்ப பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த 8-ம் திகதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லொரி வெடித்துச் சிதறியது.

இதனால் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. கிரீமியா பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பாலத்தை தகர்க்கும் முயற்சி தீவிரவாத செயலுக்கு நிகரானது. உக்ரைன் ராணுவம்தான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றம் சுமத்தினார். ஆனால், இதற்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments