ரஷ்ய படைகளால் முழு கண்டத்திற்கும் ஆபத்து: டிமிட்ரோ குலேபா எச்சரிக்கை!

You are currently viewing ரஷ்ய படைகளால் முழு கண்டத்திற்கும் ஆபத்து: டிமிட்ரோ குலேபா எச்சரிக்கை!

ரஷ்ய படைகள் முழு கண்டத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகின்றன என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா எச்சரித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 186வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் Zaporizhzhia அணு ஆலை கடுமையான ஷெல் தாக்குதலுக்கு உட்பட்டது, இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம்சாட்டி கொண்டுள்ளனர். மேலும் இந்த சண்டையால் அணு கதிர்வீச்சு கசிவு ஏற்படக்கூடும் என்ற அச்சம் வரை எழுந்துள்ளது.

இந்த நிலையில், 1986 இல் செர்னோபில் பேரழிவைக் குறிப்பிட்டு, பல தசாப்தங்களாக அணுசக்தி பாதுகாப்பு உக்ரைனின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்ய படையெடுப்பாளர்கள் ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்ய வீரர்கள் இராணுவ தளமாக மாற்றியுள்ளனர். இது முழு கண்டத்தையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே ரஷ்ய இராணுவம் ஆலையை விட்டு வெளியேற வேண்டும், ஆலை ரஷ்ய வீரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டாலும், அது உக்ரேனிய தொழிலாளர்களால் நடத்தப்படுகிறது.

அத்துடன் இன்று காலை உக்ரைனிய அதிகாரிகள் ரஷ்ய ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல் ஆலைக்கு அருகில் டினீப்பர் ஆற்றின் குறுக்கே தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments