ராணியார் மறைவு: பிரித்தானியாவின் மன்னராக முடிசூடும் இளவரசர் சார்லஸ்!

You are currently viewing ராணியார் மறைவு: பிரித்தானியாவின் மன்னராக முடிசூடும் இளவரசர் சார்லஸ்!

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து, அவரது மகன் இளவரசர் சார்லஸ் நாட்டின் புதிய மன்னராக முடிசூட உள்ளார். நீண்ட 70 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் தமது 73வது வயதில் பிரித்தானியாவின் புதிய மன்னராக சார்லஸ் முடிசூட இருக்கிறார். மிக இக்கட்டான சூழலில் பிரித்தானிய மன்னராக முடிசூடவிருக்கும் இளவரசர் சார்லஸ் இனி முதல் மூன்றாம் சார்லஸ் மன்னர் என்றே அழைக்கப்படவிருக்கிறார்.

இனவாத குற்றச்சாட்டுகளுக்கு இலக்கான பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் மட்டுமின்றி நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உறவுகள் சிதையக் கண்ட அரச குடும்பம் என மிக மோசமான சூழலில் சார்லஸ் மன்னராக உள்ளார்.

ஆனால், சார்லஸ் தொடர்பில் மெச்சும்படியான கருத்துகள் பிரித்தானிய மக்களிடத்திலும் இல்லை என்பதுடன், அவரது மனைவி குறித்தும் இருவேறு கருத்துகளே உலவுகின்றன.

இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் ஒப்புக்கொள்ள மறுப்பதுடன், இளவரசர் சார்லஸ் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளார் எனவும், அவரது பெயரிலான தொண்டு நிறுவனம் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலையில்லாத மற்றும் பின்தங்கிய இளைஞர்களுக்கு உதவியிருக்கிறது என வாதிடுகின்றனர்.

ராணியார் மறைவுக்கு பின்னர் சார்லஸ் மன்னராக முடிசூடுவதால் இளவரசர் ஹரியின் இரு பிள்ளைகளும் இனி இளவரசர் மற்றும் இளவரசி பட்டங்களை பயன்படுத்தலாம். சார்லஸுக்கு பின்னர் அவரது மகன் இளவரசர் வில்லியம் பிரித்தானிய மன்னராக முடிசூடுவார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments