வடக்கின 9 இடங்கள் கொரோனா வைரஸின் அதிக ஆபத்து!

You are currently viewing வடக்கின 9 இடங்கள் கொரோனா வைரஸின் அதிக ஆபத்து!

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணத்தில் ஒன்பது பிரதேசங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் யாழ் மாவட்டத்தில் உடுவில், யாழ் மாநகரசபை பகுதி, கரவெட்டி, வேலனை போன்றனவும் கிளிநொச்சி மாவட்டத்தில் பளை, கண்டாவளை போன்றனவும், மன்னார் மாவட்டதில் மன்னார் நகர்புற பகுதியும், வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகர்புற பகுதியும், முல்லைத்தீவு மாவட்டதில் முல்லைத்தீவு நகர்புற பகுதியும் ஆபாய வலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த அலகு ஒரு வரைபடத்தை வெளியிட்டது

பகிர்ந்துகொள்ள