வடக்கு உள்ளிட்ட 14 இடங்களில் மேலும் 30 ‘டெல்டா’ தொற்றாளர்கள்: தொற்றுக்குள்ளானோர் 68 ஆக உயர்வு!

You are currently viewing வடக்கு உள்ளிட்ட 14 இடங்களில் மேலும் 30 ‘டெல்டா’ தொற்றாளர்கள்: தொற்றுக்குள்ளானோர் 68 ஆக உயர்வு!

இந்தியாவில் திரிபு பெற்று உலகெங்கும் ஓயாத அலையாக பெரும் பாதிப்பிணை ஏற்படுத்தி வரும் மிகக் கொடிய ‘டெல்டா’ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

வவுனியா, முல்லைத்தீவு, பேருவளை உள்ளிட்ட 14 இடங்களில் வேகமாக பரவும் டெல்டா கொவிட் திரிபு தொற்றைக் கொண்ட மேலும் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் இதுவரை கொவிட்-19 டெல்டா திரிபின் தொற்றைக் கொண்ட 68 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நாட்டின் ஒரு சில இடங்களில் ‘Delta’ திரிபின் தொற்றைக் கொண்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது புதிதாக அடையாளம் காணப்பட்ட 30 பேருடன், டெல்டா திரிபு தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள், கொழும்பின் கோட்டை, கொலன்னாவை, அங்கொடை, நவகமுவ, மஹபாகே, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, இரத்மலானை, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 14 இடங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 68 பேருக்கு மேலதிகமாக சமூகத்தில் அடையாளம் காணப்படாத நபர்களும் டெல்டா திரிபுடன் இருப்பதற்கு வாய்ப்பிருக்கலாம் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

எனவே, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதே இதற்கான ஒரே தீர்வு என அவர் சுட்டிக்காட்டினார். அவ்வாறில்லையாயின் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருகும் வாய்ப்பு அதிகரிக்கலாமென அவர் தெரிவித்தார்.

டெல்டா தொற்றைக் கொண்ட முதலாவது நபர் கொழும்பு, தெமட்டகொடையிலுள்ள ஆராமய பிளேஸ் பகுதியில் கடந்த ஜூன் மாதம் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments