வட அயர்லாந் : இரண்டு நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை!

  • Post author:
You are currently viewing வட அயர்லாந் : இரண்டு நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை!

வடக்கு அயர்லாந்து, சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 23.00 மணியளவில் தொடர்ச்சியான, கடுமையான விதிமுறைகளை முன்வைத்துள்ளது என்று Reuters எழுதியுள்ளது.

நியாயமான காரணங்கள் இல்லாவிட்டால் குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது. “The Journal” பத்திரிகையின் கூற்றுப்படி, இது நியாயமானதாகவே கருதப்படுகின்றது:

நியாயமான காரணங்கள் :-

  • உணவு அல்லது மருத்துவப் பொருட்களை வாங்குவது,
  • தனியாக அல்லது உங்கள் சொந்த வீட்டு உறுப்பினர்களுடன் இணைந்து ஒரு உடற்பயிற்சி பயணத்திற்கு செல்வது,
  • மருத்துவ உதவியை நாடுவது,
  • பாதிக்கப்படக்கூடிய நபர்கள் அல்லது அவசர சேவைகளுக்கு கவனிப்பு அல்லது உதவி செய்வது,
  • இரத்த தானம் செய்வது,
  • வீட்டில் செய்ய முடியாத வேலை அல்லது தன்னார்வ வேலைக்குச் செல்வது,
  • ஒரு குடும்ப உறுப்பினரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வது

வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய வசதியுடைய அனைவரும் அவ்வாறே செய்ய உத்தரவிடப்படுகின்றார்கள்!

இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், வேலை மற்றும் இறுதிச்சடங்குகளுக்காண ஒன்றுகூடல் மற்றும் ஒரே வீட்டைச் சேர்ந்தவர்களின் அவசிய சந்திப்பு என்பன விதிவிலக்குகள் என்றும் Reuters தெரிவித்துள்ளது.

விதிமுறைகளை மீறினால் எச்சரிக்கை முதல் 65,000 Kr வரை அபராத தண்டனைகள் விதிக்கப்படும்.

வடக்கு அயர்லாந்தில் கொரோனா வைரஸ் காரணமாக மொத்தம் 13 பேர் இறந்துள்ளனர், அதே நேரத்தில் 275 தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தில், மொத்தம் 17,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள