வலிமையை இழந்த ரஷ்யா: உக்ரைனுடன் சமரச முயற்சி!

You are currently viewing வலிமையை இழந்த ரஷ்யா: உக்ரைனுடன் சமரச முயற்சி!

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை அதன் 15 சதவிகித வலிமையை உக்ரைனுடனான போரில் இழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் 10 வது மாதமாக தொடரும் நிலையில், கிட்டத்தட்ட 1 லட்சம் வீரர்களை ரஷ்யா இழந்து இருப்பதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கெர்சனையும் உக்ரைனிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ரஷ்யாவின் ஒற்றை பகுதியாக ஜனாதிபதி புடினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கெர்சனை இழந்தது பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல் ரஷ்யாவிற்கு கூடுதல் இழப்பாக பார்க்கப்படுகிறது.

அந்த தகவலின் படி, உக்ரைனுடனான போரில் ரஷ்யா தனது கருங்கடல் கடற்படையின் 15 சதவிகித வலிமையை இழந்து இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இதில் குறைந்தது 12 போர் கப்பல்கள் மற்றும் படகுகள் மூழ்கியுள்ளன அல்லது கடுமையாக சேதமடைந்து உள்ளன என தெரியவந்துள்ளது.

உக்ரைன் உடனான போரில் ரஷ்யா தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்து வரும் இந்த நிலையில், ஜனாதிபதி புடின் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்கள் இலக்குகளை அடைய, ஜனாதிபதி புடின் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளார்.

இராஜதந்திர வழிமுறைகளால் எங்கள் இலக்குகளை அடைவதே மிகவும் விரும்பத்தக்க பாதை என கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை

ரஷ்யாவின் நலன்களை பாதுகாக்க ஜனாதிபதி விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 9 மாதங்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments